நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவ வாகனம் விபத்து
நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான இந்த டிஃபெண்டர் வாகனம் இன்று (25) அதிகாலை 05.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
வாகனம் மீட்பு
பெலவத்தை திசையிலிருந்து நாடாளுமன்ற வீதி ஊடாக பொரளை நோக்கி பயணித்த போது, டிஃபெண்டர் வாகனம் தியவன்னா சதுப்பு நிலத்தில் விழுந்துள்ளது.

விபத்து நடந்த போது சாரதி மட்டும் அங்கு இருந்துள்ள நிலையில், அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
இந்நிலையில், இராணுவத்தினரின் தலையீட்டின் பின்னர், ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திடீரென பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா? Cineulagam
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri