லங்காசிறி ஊடக அனுசரணையில் கோலாகலமாக இடம்பெறும் தமிழர் விளையாட்டு விழா
தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் 25 ஆவது தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் செப்டெம்பர் 29 ஆம் திகதி பிரான்ஸில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் இணைந்து 25 ஆவது தமிழர் விளையாட்டு விழாவினை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வு பிரான்ஸுல் உள்ள L’Aire des Vents Dugny திடலில் காலை 9.00 மணிக்கு 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்நிகழ்விற்கு முற்றுமுழுதாக லங்காசிறி ஊடக அனுசரணையை வழங்கி வருவதுடன், உலக நாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சிறப்பு போட்டி நிகழ்வுகள்
பிரான்ஸில் கடந்த 24 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் தமிழர் விளையாட்டு விழா இவ்வாண்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களோடு பல்லின மக்களும் சூழ, அரச பிரமுகர்கள், அனைத்து தமிழர் கட்டமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்களை சேர்ந்த வீரர்கள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள், இன உணர்வாளர்கள், குறிப்பாக இளைஞர்களின் பங்கெடுப்பில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
அதன்படி, தமிழர்களின் பாரம்பரிய போட்டிகளான வில்லிசை போட்டி, முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், தலையணை போட்டி, சங்கீதக் கதிரை, குறிபார்த்து சுடுதல் மற்றும் சிறுவர்களுக்கான போட்டிகள் முதலானவை இடம்பெற உள்ளதுடன், சொல்லினை இசை நிகழ்ச்சியும் மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அறுசுவை உணவுகள்
மேலும், சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலையில் அறுசுவை உணவுகள் சிறப்பு உணவகத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், சிறப்பான கூல் வழங்கும் ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இளைஞர்கள்,சிறுவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கபடி, கரகாட்டம் போன்ற பல பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதுடன், மேலும் பல சிறப்பு நிகழ்வுகளும் தமிழர் விளையாட்டு விழாவில் இடம்பெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கண்கலங்கி நின்ற புலம்பெயர் உறவுகள்
இதேவேளை, பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் 24ஆவது 'தமிழர் விளையாட்டு விழா' கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் திகதி பிரான்ஸுல் உள்ள L’Aire des Vents Dugny திடலில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வின் முதல் அம்சமாக ஈழப் போரில் உயிர் நீத்த அனைத்து தமிழர்களுக்குமான பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அங்சலி செலுத்தப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து , பாடல் கலைஞர்கள் தாயகப்பாடலை பாடும்போது தமிழீழ வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தமிழீழ தேசியப் பொருட்களை கண்டு பலரும் கண்கலங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |