கெப் வாகனமும் மணல் லொறியும் மோதி விபத்து – சாரதி வைத்தியசாலையில் அனுமதி
ஹட்டன் – தரவளை பிரதான வீதியின் தரவளை பகுதியில் இன்று 05.10.2026 காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை சுமார் 7 மணியளவில், தரவளை பகுதியிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த மணல் லொறியும், டிக்கோயாவிலிருந்து புலியாவத்தை நோக்கிப் பயணித்த பால் ஏற்றிச் சென்ற கெப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் கெப் வாகனத்தின் சாரதி காயமடைந்த நிலையில், உடனடியாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு வாகனங்களும் அதிக வேகத்தில் பயணித்தமையே விபத்துக்கான பிரதான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
