முச்சக்கரவண்டி வயலுக்குள் வீழ்ந்து விபத்து! வயோதிபப் பெண் பலி
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 96ஆம் கட்டை பகுதியில் முச்சக்கரவண்டி வயலுக்குள் குடை சாய்ந்ததில் வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்றையதினம்(29.5.2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 99ஆம் கட்டையை சேர்ந்த 67 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 99ஆம் கட்டையில் இருந்து 10ஆம் கொலனிக்கு வயோதிபப் பெண் உட்பட இரு சிறுவர்கள் உறவினர் வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வருகிறது.

இதன் போது சாரதி உட்பட இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri