கொழும்பில் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு நேர்ந்த கதி..!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றைய தினம்(28.05.2026) படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் இன்று(29.05.2026) உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு 14 - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் ஹேனமுல்ல கேம்ப் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவரே, மேற்கண்டவாறு காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
இந்த சம்பவத்தில் உயிழந்தவர், 65 வயதுடைய ஒரு ஆண் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் சம்பவமொன்றின் காரணமாக ஏற்பட்ட காயங்களால் மரணம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan