மே மாத எரிபொருள் இறக்குமதியால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்
இந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் இறக்குமதி மூலம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பாரிய நட்டமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் செலவுக் கட்டமைப்பை இலங்கை வலுசக்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன் பிரகாரம் மே மாதத்தில் பயன்படுத்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்புகளில் கூட்டுத்தாபனம் பெரும் நட்டத்தைச் சந்தித்துள்ளது என தெரியவந்துள்ளது.
அட்வகோட்டா அமைப்பின் தவிசாளர் முர்தஸா ஜாஃபர்ஜி, தனது 'X' சமூக ஊடகத் தளத்தில், மானியங்கள் சேர்க்கப்படுவதற்கு முன்பே இந்த நட்டத்தின் அளவு மிக அதிகமாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டுத்தாபனத்திற்கு நட்டம்..
வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெட்ரோலுக்கு சுமார் 35 ரூபா, ஒரு லீட்டர் ஓட்டோ டீசலுக்கு 367ரூபா, மற்றும் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய்க்கு 325ரூபா, நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

மண்ணெண்ணெயில் எந்த வரியும் இல்லாததால், அதன் ஒட்டுமொத்த பற்றாக்குறை நேரடியாக கூட்டுத்தாபனத்திற்கு நட்டமாக அமைகிறது என்று ஜாஃபர்ஜி குறிப்பிடுகிறார்.
ஒரு லீட்டர் ஓட்டோ டீசல் மீது விதிக்கப்படும் மொத்த வரி சுமார் 163ரூபா, மேலும் செலவு இடைவெளியுடன் ஒப்பிடுகையில் வரித்தொகை குறைக்கப்பட்டாலும், ஒரு லீட்டர் டீசலில் ஏற்படும் நிகர இழப்பு சுமார் 162 ரூபாவாக அதிகமாகவே உள்ளது.
ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெட்ரோலில் 35ரூபா இழப்பு ஏற்பட்டாலும், அதில் 101ரூபா வரிக்கூறு அடங்கியிருப்பதால், அந்த இழப்பு ஓரளவிற்கு ஈடுசெய்யப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த புள்ளிவிபரங்கள், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியின் தீவிரத்தை தெளிவாக விளக்குகின்றன' என்று குறிப்பிட்டுள்ள ஜாஃபர்ஜி, நாட்டின் பொருளாதாரத்தின் மீதான இந்தச் சுமையைப் புரிந்துகொள்ள எரிபொருள் விலைகள் குறித்த வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam