வடக்கில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் பலி(Video)
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடருந்து கொடிகாமம் பகுதியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட வயோதிபரொருவரை மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் கொடிகாமத்தைச் சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தபால் தொடருந்து சென்று கொண்டிருந்த போது தனது வீட்டிற்கு செல்வதற்காக தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
செய்தி-தீபன்
வவுனியா
வவுனியாவில் சைக்கிளுடன் இ.போ.ச.பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து,வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் இன்று மாலை 5.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சைக்கிளில் பயணித்த வயோதிபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
வவுனியா, வெளிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா தவராசா (வயது 65) என்பவரே உயிரிழந்தவராவார்.
விபத்தையடுத்து இ.போ.ச. சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தி-ராகேஷ், திலீபன்



