ஆளும் தரப்பின் சொத்து விபரம் குறித்து அமைச்சர் வெளிப்படை
அரசியலுக்கு தனது சொந்த பணத்தை செலவழிக்க கூடாது என்பது ஜே.வி.பியின் கொள்கையாகும் என்பதோடு,அது கட்சியின் கட்டுகோப்பாகும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ன குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் சொத்து விபரங்கள் வெளியிட்டதில் அதில் பெரும்பாலானோர் செல்வந்தர்களாக காணப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலுக்காக சொந்த பணத்தை செலவு செய்ய
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் கட்சியின் ஜனாதிபதி, பிரதமர் யாராக இருந்தாலும் அவர்களின் அரசியல் செயற்பாடுகள் கட்சியின் அல்லது கட்சி உறுப்பினர்களின் நன்கொடையை கொண்டே செலவு செய்யப்படும்.
அது எமது கட்சியின் ஒழுக்கமாகும். அரசியலுக்காக தனது சொந்த பணத்தை கொட்டி செலவழிப்பதேன்.வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னர்,செலவு செய்த பணத்தை கொள்ளையடிக்கவே அதை மீள பெற்றுக் கொள்வே முயற்சி செய்வர்.
எனக்கு பில்லியன், மில்லியன் கணக்கில் பணம் இருந்தாலும் அரசியல் நடவடிக்கைக்காக செலவழிக்க முடியாது. எனக்கு தேர்தலில் கட்சியே அனைத்து செலவுகளையும் செய்தது. இது தான் உண்மையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
