இலட்சக்கணக்கில் நஷ்டத்தை சந்திக்கும் வியாபாரிகள்
கரைதுறைப்பற்று பிரதேச சபையினரால் தபால் நிலைய வீதியில் புதிதாக கட்டி வாடகைக்கு விடப்பட்ட கடைத்தொகுதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி வழங்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் முற்பணமாகவும் மாதம் 11,000 ரூபாய் வாடகைக்கு கடைகளை எடுத்து நடாத்தும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பிரதேச சபைக்கு எழுத்து மூலம் அறிவித்தும்
குறித்த கடைத்தொகுதிகளில் சுவர்கள் வெடித்து காணப்படுதல், தண்ணீர் கடைகளுக்குள் புகுதல், இதனால் குளிர்சாதன பெட்டிகள் பழுதடைதல், குளிர்சாதன பெட்டிக்குள் வைக்கப்படும் பூ பழுதடைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
இது தொடர்பாக கடை உரிமையாளர் ஒருவர் கூறும்போது பூ மாலை கட்டி வியாபாரம் செய்வதே எமது பிரதான தொழிலாக காணப்படுவதனால் பூக்கள் பழுதடைந்தமையால் லட்சக்கணக்கான நட்டத்தை சந்தித்துள்ளேன்.
மூன்றாவது தடவையாக பூக்கள் அனைத்தும் அழுகி கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பல தடவைகள் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு எழுத்து மூலம் அறிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



