யாழ். நெடுந்தீவில் முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் பலி
யாழ். நெடுந்தீவு பிரதான வீதி, இலங்கை வங்கி கிளைக்கு அருகே ஏற்பட்ட முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவு 11ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த பரணாந்து சகாயதேவதாஸ் (வயது 59) என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வேகமாக வந்த முச்சக்கரவண்டி வீதியினை கடக்க முற்பட்டவரை மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதேவேளை, முச்சக்கரவண்டி சாரதி நெடுந்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 10 மணி நேரம் முன்

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri

அம்மா என சொன்ன கிரிஷ், வசமாக சிக்கிக்கொண்ட ரோகிணி.. சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam
