யாழ். சாவகச்சேரியில் விபத்து: பாடசாலை மாணவன் பலி
யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து, இன்று (01) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மீசாலை கிழக்கைச் சேர்ந்த 18 வயதான மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சை
குறித்த மாணவன், பாடசாலையிலிருந்து துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய வேளையில், யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சாவகச்சேரி ஆதார
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும், விபத்திற்கு காரணமான பேருந்து சாரதியை கைது செய்த சாவகச்சேரிப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam