தமிழர் பகுதியில் இடம்பெற்ற இரு வெவ்வேறு விபத்து: ஒருவர் மரணம் (Photos)
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு குடத்தினை சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இன்றைய தினம் (21.03.2023) இடம்பெற்ற இந்த விபத்தில் பெண்ணொருவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்மன் பகுதியிலிருந்து மணல் மண்ணை ஏற்றிக் கொண்டு பருத்தித்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பார ஊர்தியும், பருத்தித்துறை பகுதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பலியானவர் வடமராட்சி கிழக்கு வத்தராயன் பகுதியைச் சேர்ந்த கணேசன் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவரோடு கூட வந்த பெண்மணி தற்போது சிகிச்சை தீவிர சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனை மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி விபத்து
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதான வீதியில் அரசடிச் சந்தியில் கப்ரக வாகனமும் டிப்பர் கனரக வாகனமும் மோதி விபத்து. யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளிளோடு மோதுவதைத் தவிர்ப்பதற்காக எதிர்த் திசையில் திடீரென திருப்பிய பொழுது முன்னால் வந்த கப்ரக வாகனத்தோடு பலமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாது இதன்போது, கப்வாகனம் முற்றாகச் செய்தமடைந்தது.
இவ்விபத்தை அடுத்து டிப்பர் சாரதி டிப்பர்வாகனத்தை கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். விபத்தில் கப் சாரதிக்கு தெய்வாதீனமாக எந்த காயங்களும் ஏற்படவில்லை.
இது தொடர்பான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
