தம்புள்ளையில் கோர விபத்து! இரு இளைஞர்கள் பலி
தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியின் திகம்பதஹ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(09.2.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
வான் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திகம்பதஹ பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், எதிரே வந்த வானுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18 மற்றும் 20 வயதுடைய இரண்டு இளைஞர்களே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தம்புள்ளை மற்றும் தனமல்வில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
விபத்தின் போது வானைச் செலுத்திய சாரதி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் திகம்பதஹ பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்தவர்கள் எனப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.