மற்றுமொரு பாரிய விபத்து.. வெளிநாட்டு தம்பதியினர் உட்பட 9 பேர் படுகாயம்
அனுராதபுரம் - கண்டி பிரதான வீதியில் மரதன்கடவல பகுதியில் ஜீப் மற்றும் வான் மோதிய விபத்தில் வெளிநாட்டு தம்பதியர் உட்பட 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வெளிநாட்டு தம்பதியினரை ஏற்றிச் சென்ற ஜீப், எதிர்த் திசையில் இருந்து வந்த வான் மீது மோதியுள்ளது.
கொழும்பு சென்ற ஜீப்
இவ்விபத்தில், வெளிநாட்டு தம்பதியினரும் ஜீப்பின் ஓட்டுநரும் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் வானில் இருந்த மற்ற குழுவினர் சிகிச்சைக்காக மரதன்கடவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து குறித்து மரதன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam