ஹட்டன் நகரில் விபத்திற்கு உள்ளான சிறிய ரக லொறி
ஹட்டன் நகரில் சிறிய ரக லொறியொன்று கடைபடி ஏறி மின்கம்பத்தில் மோதி விபத்திற்கு உள்ளாகி உள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (11.10.2026) பதிவாகியுள்ளது.
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் தனியார் வங்கிக்கு அருகில் உள்ள டயர் கடையொன்றின் படிகளை ஏறி அதிசக்தி வாய்ந்த மின் கம்பத்தில்; மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் லொறிக்கும் மின் கம்பத்திற்கும் இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் ஒன்றுக்கு சேதமேற்பட்டுள்ளது.

விசாரணையில் தகவல்
குறித்த லொறி தனியார் கம்பனிக்கு சொந்தமானது என்றும் லொறி நிறுத்துவதற்கு பிரேக்கினை அழுத்துவதற்கு பதிலாக எஸ்லேட்டரினை அழுத்தியதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பரபரப்பாகும் சவூதி விமான நிலைய தாக்குதல்! 12 பேர் பலி - பலரின் நிலைமை கவலைக்கிடம்: மூடப்படும் வான்வெளிகள்