அம்பாறை விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அம்பாறை - சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனத்தை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார்சைக்கிள் விபத்திற்கு உள்ளாகியதில் அதன் சாரதி பாடுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதனை தொடர்ந்து அவர் தொடர்ச்சியாக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய அப்தல் நஸீர் முகமட் அஸீல் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய உழவு இயந்திர சாரதியை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
மரணத்திற்கான காரணம்
விபத்தில் தலையில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கைதான சாரதியை பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது நாளை (6) வரை அவரை விளக்கமியலில் வக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 மணி நேரம் முன்

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
