அரச அதிகாரிகளுக்கான வாகன அனுமதி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்
அரச சேவையின் மூத்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வரியில்லா வாகன அனுமதிகள், எதிர்வரும் பாதீட்டில் மீண்டும் வழங்கப்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக வழங்கப்பட்ட சுமார் 23,000 அதிகாரிகளுக்கான அனுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேலும் அதிகாரிகள் இந்த வசதிக்குத் தகுதி பெறுவதாக தகவல்கள தெரிவிக்கின்றன.
வாகன இறக்குமதி
எனினும், சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்கான - ஆண்டு இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு இருப்பு இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த வசதியை நிறுத்தி வைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக, ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதேவேளை, வாகன இறக்குமதி காரணமாக மொத்த அந்நிய செலாவணி வெளியேற்றம் முதல் எட்டு மாதங்களில் 918 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
