ஈரான் ஜனாதிபதி சென்ற உலங்கு வானூர்தி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, பெல் 212 (Bell 212) எனப்படும் உலங்கு வானூர்தி பயணித்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, குறித்த வகையான உலங்கு வானூர்திகள் 1960களில் கனேடிய இராணுவத்திற்காக உருவாக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இவை, அமெரிக்க நிறுவனமான பெல் (Bell) உலங்கு வானூர்திகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்க (America) சட்ட நடைமுறை முகவர் மற்றும் தாய்லாந்தின் பொலிஸார் உட்பட அரசாங்க விமான இயக்குநர்களால் இவை பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உலங்கு வானூர்தியின் கொள்ளளவு
மேலும், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படையிடம் இந்த வகையான உலங்கு வானூர்திகள் மொத்தம் 10 காணப்படுவதாக 2024இற்கான உலக விமானப்படை கோப்பகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அவை ஆட்களை ஏற்றிச் செல்லல், சரக்குகளை ஏற்றிச் செல்லல் மற்றும் போருக்கான ஆயுதங்களை கொண்டு செல்லல் உள்ளிட்ட அனைத்து விதமான தேவைகளுக்கும் உகந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதியை ரைசியை ஏற்றி சென்ற உலங்கு வானூர்தியில் 6 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் பயணிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |