100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிம்பாப்பே அணியை தோற்கடித்த இந்தியா
புதிய இணைப்பு
சிம்பாப்பே அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
ஹராரேவில்(Harare) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 234 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்பே அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 134 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
முதலாம் இணைப்பு
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2வது டி20 போட்டியில் சிம்பாப்பே அணிக்கு 234 என்ற இமாலய வெற்றியிலக்கை நிர்ணயித்துள்ளது.
சிம்பாப்பேவின் ஹராரேவில் நடைபெற்றுவரும் இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுபெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரமிழந்து 234 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
குறித்த போட்டியில் அபிஷேக் சர்மா - கெய்க்வாட் ஜோடி சிறந்த இணைப்பாட்டத்தை அணிக்காக பெற்றுக்கொடுக்க இந்திய அணி 200 ஓட்டங்களை கடக்க அடித்தளமிட்டது.
அபிஷேக் சர்மா சதம்
அபிஷேக் சர்மா 47 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய கெய்க்வாட் 38 பந்தில் அரைசதம் கடந்தார்.
மேலும், ரிங்கு சிங்கும் அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
எனினும் நேற்றைய முதலாவது ஆட்டத்தில் சிம்பாப்பே அணியிடம் இந்திய அணி தோழ்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |