முல்லைத்தீவில் துப்பாக்கி ரவைகளுடன் இளைஞன் கைது
முல்லைத்தீவு - உடுப்புக்குளம் பகுதியில் T - 56 ரக துப்பாக்கி ரவைகளுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள தனியார் வீட்டு காணியில் துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக நேற்று (24.01.2024) மாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி ரவைகள்
இந்நிலையில், குறித்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபரின் வீட்டுக் காணியிலிருந்து ரி -56 ரக துப்பாக்கி ரவைகள் 100 மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முல்லைத்தீவு மாவட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan