வடக்கில் இராணுவம் அமைத்த விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு வருடம்

Sri Lanka Army Jaffna Northern Province of Sri Lanka
By Parthiban Apr 09, 2024 09:24 PM GMT
Report

தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை அபகரித்து வடக்கில் பௌத்த விகாரை இராணுவத்தினரால் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி ஒரு வருட காலமாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அந்த காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு செய்யாவிடின் அந்த காணிகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை மேலும் விரிவுபடுத்த வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளதோடு, காங்கேசன்துறை திஸ்ஸ விகாரைக்கு முன்பாக நின்று வெளியிட்ட காணொளியில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“தனியாருக்கு சொந்தமான 120 பரப்பு காணிகள் இராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சரின் கபடத்தனத்திற்கு இடமளிக்க மாட்டோம்: எழுந்தது கண்டனம்

கடற்றொழில் அமைச்சரின் கபடத்தனத்திற்கு இடமளிக்க மாட்டோம்: எழுந்தது கண்டனம்

தொடர்ச்சியான போராட்டம்

இந்த காணிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அந்த உரிமையாளர்கள் கடந்த பல வருடங்களாக கோரி வருகின்ற போதிலும் அவர்களிடம் கையளிக்கப்படவில்லை.

இதனால் கடந்த ஒரு வருடமாக இந்த விகாரைக்கு முன்பாக தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எனினும் காணியை விடுவிப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலைமைத் தொடருமானால் குடா நாடு முழுவதும் மக்களைத் திரட்டி போராட்டங்களை விரிவுப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.

வடக்கில் இராணுவம் அமைத்த விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு வருடம் | A Year Into The Protest Against The North Temple

மிக விரைவாக இந்த கட்டிடத்தை அகற்றி உரியவர்களிடம் காணியை கையளிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். "

காங்கேசன்துறை, வலிகாமம் வடக்கு, தையிட்டி பிரதேசத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு அருகாமையில் வீதியோரத்தில் ஓராண்டாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் தமிழர்கள் 'சட்டவிரோத விகாரையை உடனடியாக அகற்றுங்கள்', மற்றும் 'எங்களின் காணி எமக்கு வேண்டும்' மற்றும் அமைதியை குலைக்கும் பொலிஸாரை நாங்கள் விரும்பவில்லை' என கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இலங்கை இராணுவம்

மேலும்,பிராந்திய காணி அதிகார சபையின் அனுமதியின்றி தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை சுவீகரித்து இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 27 ஏப்ரல் 2023 அன்று இடம்பெற்றது என இலங்கை இராணுவம் ஏப்ரல் 29ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

வடக்கில் இராணுவம் அமைத்த விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு வருடம் | A Year Into The Protest Against The North Temple

கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றைக் கொண்ட இந்த விகாரை, தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதாக இராணுவம் தெரிவிக்கின்றது.

14 தமிழ் குடும்பங்களின் 6.2 ஏக்கர் நிலத்தை இராணுவம் வலுக்கட்டாயமாக சுவீகரித்து திஸ்ஸ விகாரையை நிர்மாணித்துள்ளதாக தமது காணிகளை விடுவிக்கக் கோரி மாதந்தம் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் போராட்டம் நடத்தும் தமிழர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அத்துடன், விகாரையை நிர்மாணிப்பதற்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்படவில்லை” என சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் முறைக்கேடுகள்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் முறைக்கேடுகள்

விடுதலைப்புலிகள் ஆபத்தில் சிக்கியபோது தொலைபேசிகளை நிறுத்திய தமிழ் தலைவர்கள்

விடுதலைப்புலிகள் ஆபத்தில் சிக்கியபோது தொலைபேசிகளை நிறுத்திய தமிழ் தலைவர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US