யாழிற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகள் குழு (Photos)
யாழ் மாவட்டத்திற்கு உலக வங்கி பிரதிநிதிகள் குழு இன்று(30.10.2023) விஜயம் செய்துள்ளனர்.
உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் அண்ணா பிரிட்ஜெட் தலைமையிலான குழுவினரே விஜயம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்து உலக வங்கியின் நிதி உதவியில் நடைபெறும் வேலை திட்டத்தை பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார மேம்பாடு
அதன் பின்னர் தற்பொழுது இடம் பெற்று வரும் சுகாதார மேம்பாடு, உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கேட்டு அறிந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலக வங்கியின் உயர்மட்ட குழு வடமாகாண பிரதம செயல்லாளர் சமன் பந்துல சேன, வடமகாண சுகாதார பணிப்பாளர் ரீ.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர் கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் குறித்த விஜயத்தின் போது கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சட்டமா அதிபர்: வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவு








