தங்க நகைகளுடன் வழிதவறிய வயோதிப பெண்ணுக்கு நடந்த நெகிழ்ச்சி செயல்
நுவரெலியா(Nuwara eliya) - தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் தங்க ஆபரணங்களோடு வழி தவறிய வயோதிப பெண்ணொருவருக்கு உதவிய தோட்ட தொழிலாளிக்கு தோட்ட நிர்வாகம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் தங்க ஆபரணங்களுடன் வயோதிப பெண்ணொருவர் வழி தவறி சென்றுள்ளார்.
வழி தவறிய வயோதிப பெண்
இதனை அறிந்துக்கொண்ட தோட்ட தொழிலாளி ஒருவர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளதுடன் வழி தவறிய வயோதிப பெண்ணுக்கு உதவி செய்து அவரை பாதுகாப்பாக தங்க வைத்து உரிய வீட்டில் அவரது ஆவணங்களோடு ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில், குறித்த தோட்ட தொழிலாளியின் சேவையையும் மனிதாபிமானத்தையும் கருத்திற்கொண்டு அவருக்கு தோட்ட நிர்வாகம் பரிசு பொதியொன்றை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
இதன்போது, தலவாக்கலை - மட்டுகலை பகுதியை சேர்ந்த 80 வயது மதிக்கதக்க மருதமுத்து இளையாத்தா என்ற வயோதிப பெண்ணே வழி தவறியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
