போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதியுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இந்த கைது நடவடிக்கை பேசாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம்(04.10.2023) இடம்பெற்றுள்ளது.

மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் குறித்த வீட்டிற்குச் சென்று சோதனையை முன்னெடுத்தனர்.
இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கேரள கஞ்சா பொதியை மீட்டனர்.
சுமார் 2 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த வீட்டில் இருந்த 44 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri