அம்பாறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள யுக்திய பரிசோதனை
சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக பொலிஸாரினால் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிராந்தியத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஆபத்தான போதைப்பொருட்களை கடத்துவதையும் தடுப்பது மிகவும் அவசியமான நோக்கமாக யுக்திய பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையானது இன்று(22.01.2024) மாலை முதல் இரவு வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பொலிஸ் சோதனை
இதன்போது மட்டக்களப்பு - அக்கரைப்பற்று பிரதான வீதி மற்றும் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி ஊடாக போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் பாலமுனை பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகாமையில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்குரிய தொலைபேசி இலங்கங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்களும் பேருந்துகளில் பொலிஸாரால் ஒட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பொலிஸ் மோப்ப நாய் உதவியுடன் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்பரிசோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனைக்கமைய அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.கே பண்டார வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி தேசப்பிரிய பத்ரன மேற்பார்வையில் அக்கரைப்பற்று திருக்கோவில் இறக்காமம் நிந்தவூர் காரைதீவு உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |