கருணா தரப்பை சேர்ந்த ஒருவர் அதிரடி கைது.. பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொலை குற்றத்திற்கு தயாராகி வந்த குற்றவியல் கும்பல் உறுப்பினரான கரந்தெனிய சுத்தாவின் கூலி கொலையாளியை மீட்டியாகொட பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், அவர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என்பதுடன், அந்தக் காலகட்டத்தில் அவர் கருணா தரப்பில் இருந்ததாக பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு ரிவால்வர்
சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வரையும் பொலிஸார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கொள்ளைச் சம்பவம் தொடர்பாக காலி சிறையில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அவர், அந்த நேரத்தில் தன்னை கரந்தெனிய சுத்தா என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கரந்தெனிய சுத்தா நேரடியாக சம்பந்தப்பட்ட நபருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் அறிவுறுத்தலின் பேரில், மீட்டியாகொட பொலிஸார் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |