யாழில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவரின் தவறான முடிவு
யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப்பரீட்சைக்கு மருத்துவப்பிரிவில் தோற்றிய குறித்த மாணவி பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னர் நேற்று(9) தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாணவி மூன்றாவது முறையாக பரீட்சை எழுதியுள்ளார். எழுதியவற்றை மீள் சோதனை செய்து குறைந்த புள்ளிகள் வரும் என்ற அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.

பொலிஸார் விசாரணை

மாணவியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் உடல் கூற்று சோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் இன்று(10) காலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri