சாலை விபத்து ஓர் உயிர்கொல்லி
உலகளாவிய ரீதியில் இன்று மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் முக்கியமான ஒன்றாக சாலை விபத்து காணப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் வீதி விபத்துக்களினால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் பொருட்சேதங்களின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
தினம் தோறும் பத்திரிகைகளிலோ அல்லது இணையதள பக்கங்களிலோ நாம் வாசிக்கும் போது சாலை விபத்து தொடர்பான அதிகளவு செய்தியினை அன்றாடம் பார்க்கக் கூடியதாக உள்ளது.
ஓட்டுநர்களின் கவனக்குறைவு
பச்சிளம் பாலகன் முதல் வயோதிபர் வரை சாலை விபத்தில் சிக்கி உயிர் இழக்கின்றனர். இன்று சாலை விபத்தில் உயிரிளப்போரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
வாகனங்கள் வாகனங்களுடன் மோதுவதாலும் அல்லது வாகனங்கள் கட்டடங்களுடன் மோதுவதனாலோ இவ்வாறான சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதிகரித்த வாகனங்களின் பயன்பாடு சனத்தொகை அதிகரிப்புமே சாலை விபத்துக்கு பிரதான காரணமாக காணப்படுகின்றது.

சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கு இயற்கையான காரணங்களே அதிகளவு காணப்படுகின்றன. சாலை விபத்துக்கள் அதிகமாக ஏற்பட காரணம் ஓட்டுநர்களின் கவனக்குறைவாகும்.
தொலைபேசியில் உரையாடிக் கொண்டு வாகனத்தை ஓட்டுவதனாலும், நித்திரை தூக்கத்தில் வாகனம் ஓட்டுவதாலும், வாகனங்களின் பாகங்கள் சரியாக உள்ளனவா என்பதை கவனிக்காமல் வாகனம் ஓட்டுவதாலும், வாகனங்களில் செல்லும்போது அதிகளவு சத்தமாக பாட்டு போடுவதனாலும், தேவை இல்லாத நேரத்தில் ஒலி எழுப்புவதனாலும் இவ்வாறான சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இது தவிர வாகன ஓட்டுநர்கள் இனிய வாகனங்களோடு போட்டி போட்டு வேகக்கட்டுப்பாட்டு வரம்பை மீறி வாகனங்களை ஓட்டுவதாலும் நாளாந்தம் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகின்றன.
பிரச்சினைகளும் சவாலாகளும்
அது மட்டுமின்றி சாலையில் தாறுமாறாக வாகனங்களை செலுத்துவதாலும் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
அதிகளவு மழை காலங்களில் வேக கட்டுப்பாட்டை மீறி வாகனங்களை செலுத்தும் போது வாகன ரயரின் தேய்வு காரணமாக வாகனங்கள் சறுக்கி விபத்துக்கள் ஏற்பட நேரும். அத்தோடு மழைக்காலத்தில் பள்ளங்களில் நீர் தேங்கி இருப்பதனால் மேடு பள்ளம் எனப் பாராது வாகனங்களை ஓட்டுவதனால் சாலை விபத்துக்கள் ஏற்பட நேருகிறன.

முறையான சாலை ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்காததனாலும் குறிப்பாக வீதிச் சமிஞ்சை விளக்குகளை அவதானிக்காமல் போக்குவரத்து செய்வதாலும் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.
பெருநகரப் பிரதேசங்களில் சாலை விபத்து என்பது பாரியதொரு பிரச்சினையாகவும் சவாலாகவும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
இவ்வாறு பெருநகரப் பகுதிகளில் சாலை விபத்து ஏற்பட காரணம் புதிய சாலைகள் காணப்படுவது அதிகளவு சன நெரிசலும் இதற்குக் காரணமாகின்றது. இவ்வாறான சாலை விபத்து அதிகமான உயிர்களை காவு கொண்டு செல்கிறது.
வாகனங்களை செலுத்தும் போது குறிப்பாக மோட்டார் சைக்கிளை செலுத்தும் போது தலைக்கவசம் அணியாது செல்வதாலும் விபத்து ஏற்படும் போது உயிர் மாய்ந்து போகின்ற சம்பவங்கள் பலவும் காணப்படுகின்றன.
இவற்றோடு புதிய வாகனங்களை அனுபவம் அற்றவர்கள் இயக்கும் சூழ்நிலைகளில் கையாளத் தெரியாததாலும் சாலை விபத்துக்கள் இடம்பெற நேரிடுகின்றது.
வேக கட்டுப்பாட்டு நடவடிக்கை
சாலை விபத்துக்கள் இவ்வாறு ஏற்படுவதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம் என நோக்கும் போது முதலில் தலைவழிப்பாதைகள் முறையாக அமைக்கப்பட வேண்டும் .
அத்தோடு வீதியில் காணப்படும் இறந்த விலங்குகளின் உடல்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் இருப்பின் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள் கவனமாக வாகனத்தை செலுத்த வேண்டும், வாகனத்தை செலுத்தும் போது மதுபாவனை, கையடக்க தொலைபேசி என்பவற்றை பயன்படுத்தக் கூடாது, வாகனங்கள் வேகமாக ஓடுவதையும் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக "வாகனங்களின் வேக கட்டுப்பாட்டை குறைப்பதனால் 35 சதவீதம் வீதி விபத்துக்களை குறைவடையச் செய்யலாம் என வழக்கறிஞர் ஏ.எஸ்.பிலாஸ் கூறுகின்றார்".

வாகனத்தை செலுத்த ஆரம்பிக்கும் போது வாகன ஓட்டுநர்கள் வாகனங்களின் பாகங்கள் சரியாக செயற்படுகின்றனவா என அவதானித்த பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும்.
வாகனங்களை செலுத்தும் போது வீதி விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு முறையாக கடைப்பிடிக்காத பட்சத்தில் வீதி விதிகளை மீறி செயற்படுவோருக்கு கடுமையான தண்டனையையும் வழங்க வேண்டும். இவ்வாறு மக்கள் செயற்படுவதன் மூலம் வீதி விபத்துகளை குறைக்கலாம்.
சாலை விபத்து ஏற்படுவதை ஒருவர் கண்காணித்துக் கொண்டு நிற்கின்றார் எனின் அவர் பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்வதன் மூலம் சாலை விபத்துக்கள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்த்துக் கொள்ளலாம்.
மதுபான பாவனை
குறிப்பாக சாலையில் விபத்து ஏற்படுவதை நீங்கள் அவதானித்தால் அந்தப் பாதையில் வரும் ஏனைய வாகனங்களுக்கு ஏதோ ஒரு வகையில் உடனடியாக எச்சரிக்கை வழங்க வேண்டும்.
அத்தோடு சாலை விபத்து நடந்த இடத்தைப் பற்றிய முழு தகவலினையும் உடனடியாக பொலிஸாருக்கும் அருகில் உள்ள மருத்துவமனைக்கும் தகவலை தெரிவிக்க வேண்டும்.
அது மட்டுமின்றி விபத்துக்கு உள்ளாகிய வரை எந்த நிலையிலும் தனியே விட்டுவிட்டு செல்லாது அவருடன் இருந்து அவருக்குரிய முதலுதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும்.
இவ்வாறு சாலை விபத்து ஏற்படும்போது நாம் ஒவ்வொருவரும் இவ்வாறான செயற்பாடுகளை செய்வோமானால் ஒவ்வொரு உயிர்களையும் நம்மால் காப்பாற்ற முடியும்.

சாலையில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் எனில் வீதி விபத்துக்களை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
அந்த வகையில் வீதி விதிகளை கடைபிடிக்கும் போது சாலை விபத்துகளை தடுக்க முடியும். இவ்வாறான வீதி விதிமுறைகளை பார்க்கும்போது வாகனத்தை செலுத்தும் போது கையடக்க தொலைபேசி பாவிக்க கூடாது.
மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது, வேக கட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் ஓட்டுநர் வார்ப்பட்டை(seat belt) அணிய வேண்டும், இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
பாதசாரிகள் மஞ்சக் கோட்டு கடவையினால் பீதியை கடக்க வேண்டும், 18 வயதுக்கு குறைந்தோர் தங்களை ஓட்டக்கூடாது, வாகனங்களை ஓட்டும்போது போக்குவரத்து சைகைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் இது போன்ற வீதி விதிமுறைகளை கடைபிடிக்கும் போது சாலை விபத்துகளில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
சாலை பாதுகாப்பு 
சாலை பாதுகாப்பில் உள்ள முக்கிய விதிகளையும் வாகன ஓட்டுநர்கள் சரியாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இதன் மூலமும் சாலை விபத்துக்களை தவிர்க்க முடியும். குறிப்பாக வாகனங்களை ஓட்டுநர்கள் சாலையின் இடது பக்கத்தில் செலுத்த வேண்டும்.

வாகனங்களை முந்திச் செல்வதை தவிர்த்தல், பாதசாரி கடவைகளுக்கு முன் வாகனத்தின் வேகத்தை குறைத்தல், தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி, வண்டி போன்றவற்றுக்கு வழி விடுதல், வாகனம் U என்ன திருப்பும் அடையாளம் உள்ள இடத்தில் மட்டும் வாகனங்களை திருப்புதல், வலது பக்கமாகவோ அல்லது இடது பக்கமாகவோ வாகனத்தை செலுத்தும் போது சைகை காட்ட வேண்டும்.
வாகன ஓட்டுநர் தேவையில்லாமல் ஒலிப்பானை அதை பயன்படுத்தக் கூடாது என இதுபோன்ற சாலை பாதுகாப்பை கடைபிடிப்பதன் மூலம் சாலை விபத்தை தவிர்த்து விபத்துகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் மேற்கொள்ளும் விழிப்புணர்வு தகவல்களை மக்கள் அறிந்து அதற்கு ஏற்ப செயற்படுவதனால் சாலை விபத்துக்களை இயங்கலை தவிர்க்க முடியும்.
உதாரணமாக நீண்ட தூரம் வாகனங்களை தொடர்ந்து செலுத்துவதை தவிர்த்தல், எதிரே வரும் வாகனத்திற்கு ஏற்ற வகையில் நாம் வாகனத்தை செலுத்தல், வாகன அனுமதி பாத்தரத்தின் முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் பரப்புதல், வாகனங்கள் போட்டிக்கு செல்வதனால் ஏற்படும் தீமைகளை மக்களுக்கு எடுத்து இயம்புதல் போன்ற விழிப்புணர்வு தகவலை மக்களுக்கு வழங்குவதனால் சாலை விபத்துக்கள் ஏற்படுவதனை எம்மால் தவிர்க்க முடியும்.
மனிதர்களாகிய நாம் அனைவரும் சிந்தித்து ஒன்று இணைந்து ஒற்றுமையாக செயல்படுவோமா இவ்வாறான சாலை விபத்துகளினால் ஏற்படுகின்ற உயிர் இழப்புகளையும் பொருட் சேதங்களையும் இயன்றளவு குறைத்துக் கொள்ள முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        