இலங்கை வான் பரப்பில் நிகழவுள்ள மாற்றம்
நாளை காலை வானில் செவ்வாய் - வியாழன் ( Mars-Jupiter) இணைவை அவதானிக்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி கிளார்க் ( Arthur C. Clarke) நிறுவனத்தின் வானியல் துறை தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய் மற்றும் வியாழன் மிக நெருக்கமாகத் தோன்றும், அவை அதிகாலையில் "இரட்டைக் கோள்" போல இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரு கோள்கள்
இந்நிலையில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியவை அந்தந்த சுற்றுப்பாதையில் 350 மில்லியன் மைல்கள் (575 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் இருக்கும்.
எனினும், இரவு வானில் சந்திரன் இணைவது பொதுவானது என்றாலும், இரு கோள்களுக்கு இடையே இணைவது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் இதுபோன்ற ஒரு அரிய இணைப்பு இன்று (14) இரவு 8.57 மணி முதல் இரவு 9.51 மணி வரை நிகழும் ஆனால் அந்த நேரத்தில், செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையிலான கோண தூரம் ஒரு டிகிரிக்கும் குறைவானது ஆகும்.
தொலைநோக்கி
ஆனால் அந்த காலப்பகுதியில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்கள் தொடுவானத்தில் இருந்து எழாததால் நாளை (15) அதிகாலை 2 மணிக்கு பின்னர் இலங்கையர்கள் இணைவதை அவதானிக்க முடியும்.
அந்த நேரத்தில், செவ்வாய் மற்றும் வியாழன் இடையே கோண வேறுபாடு 19' 29'' ஆக அதிகரிக்கும்.
இந்த நிகழ்வை தொலைநோக்கி மூலம் மக்கள் சிறப்பாகக் அவதானிக்க முடியும். இருப்பினும், செவ்வாய் மற்றும் வியாழன் இடையே இந்த வகையான இணைப்பு 2033 ஆம் ஆண்டில் மீளவும் சிறப்பாக அவதானிக்க முடியும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
