செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் குறித்து நாசா வெளியிட்ட தகவல்
நாசாவின் (NASA) புதிய ஆராய்ச்சியின் படி, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிற்கு அடியில் ஆழமான நிலத்தடி நீர்த்தேக்கத்தின் ஆதாரத்தை வெளிப்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் குழு மதிப்பிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் நடுவில் உள்ள சிறிய விரிசல்கள் மற்றும் பாறைகளின் துளைகளில் சிக்கி, கிரகத்தின் மேற்பரப்பில் கடல்களை நிரப்ப போதுமான தண்ணீர் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் உட்புறம்
நிலத்தடி நீர் செவ்வாய் கிரகம் முழுவதையும் 1 மைல் (1.6 கிலோமீட்டர்) ஆழம் வரை உள்ளடக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
2018 முதல் 2022 வரை செவ்வாய் கிரகத்தின் உட்புறத்தை ஆய்வு செய்ய நில அதிர்வுமானியைப் பயன்படுத்திய நாசாவின் இன்சைட் லேண்டரிலிருந்து இந்தத் தரவு வெளிவந்துள்ளது.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தை ஆராயும் எதிர்கால விண்வெளி வீரர்கள், தண்ணீரை அணுக முயற்சித்தால் பாரிய சவால்களையும் சந்திக்க நேரிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |