இலங்கையில் இயங்குவதற்கான உரிமத்தைப் பெற்ற ஸ்டார்லிங்க்

Sri Lanka Sri Lankan Peoples Elon Musk
By Rukshy Aug 13, 2024 09:49 AM GMT
Report

இலங்கையில் ஸ்டார்லிங்க் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு இயங்குவதற்கான உரிமத்தை இலங்கை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

இது தேசத்தில் இணைய புரட்சியை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவுள்ளதோடு இதன் அதிவேக இணைய சேவை மூலம் இன்றைய டிஜிட்டல் காலத்தில் கல்வி சார்ந்த முன்னேற்றங்களை இளைஞர்கள் அடைவார்கள்.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) 1991ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின் 17B பிரிவின் கீழ் Starlink Lanka (Private) Limited நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் குறித்து நாசா வெளியிட்ட தகவல்

செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் குறித்து நாசா வெளியிட்ட தகவல்

அதிவேக இணையம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எலோன் மஸ்க் ஆகியோருக்கு இடையில் இந்தோனேசியாவில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இலங்கையில் இயங்குவதற்கான உரிமத்தைப் பெற்ற ஸ்டார்லிங்க் | Starlink Licensed To Operate In Sri Lanka

இந்த சந்திப்பின் போது, ​​மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் ஊடாக அதிவேக இணையத்திற்கான தேசத்தின் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இலங்கையை Musk's Starlink வலையமைப்புடன் இணைப்பதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் இயங்குவதற்கான உரிமத்தைப் பெற்ற ஸ்டார்லிங்க் | Starlink Licensed To Operate In Sri Lanka

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கு இணையத்தை அறிமுகப்படுத்தியதைப் போன்றே, தற்போது அதிவேக இணைய சேவையையும் இலங்கைக்குக் கொண்டுவந்துள்ளார். இதனால் அனைவரும் இனி உலகோடு இன்னும் வேகமாக தொடர்புகொள்ள முடியும்.   

தொழில்நுட்ப சேவை

இதன் விளைவாக, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கையில் இணைய வசதி சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இயங்குவதற்கான உரிமத்தைப் பெற்ற ஸ்டார்லிங்க் | Starlink Licensed To Operate In Sri Lanka

இந்த உரிமம் ஸ்டார்லிங்கை நாடு முழுவதும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப சேவைகளை வழங்க உதவுகிறது.

ஸ்டார்லிங்க் அறிமுகம் இலங்கை மக்களுக்கு பெரிதும் உதவும். பேரிடர் காலங்களிலும் பயன்படுத்த முடியும். தொலை தூரங்களில் இணைய தொடர்பு இல்லாமல் இருப்பவர்களும் பயனடைவார்கள்.

இலங்கையில் இயங்குவதற்கான உரிமத்தைப் பெற்ற ஸ்டார்லிங்க் | Starlink Licensed To Operate In Sri Lanka

மேலும், மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக இணையத்திற்கான இலங்கையின் அணுகலை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக இந்த உரிமம் ஆகஸ்ட் 12 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அத்துடன், இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் தொழிநுட்ப இணைய சேவையை விட இந்த இணைய சேவையானது பல மடங்கு வேகமானது என்பதனால் உலகில் எந்த இடத்திலிருந்தும் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையில் இயங்குவதற்கான உரிமத்தைப் பெற்ற ஸ்டார்லிங்க் | Starlink Licensed To Operate In Sri Lanka

இதனால் எதிர்காலத்தில் இலங்கையின் தொழில்நுட்பத் துறையில் சிறந்த சூழல் உருவாகும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

கடுமையான பங்குச்சரிவை சந்தித்துள்ள இந்தியாவின் அதானி குழுமம்

கடுமையான பங்குச்சரிவை சந்தித்துள்ள இந்தியாவின் அதானி குழுமம்

ஐசிசி தரப்படுத்தலில் முதலிடத்தை தக்கவைத்தார் சமாரி

ஐசிசி தரப்படுத்தலில் முதலிடத்தை தக்கவைத்தார் சமாரி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US