தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த கொடூரம்
கம்பஹா – முதுன்கொட பிரதேசத்தில் 32 வயதுடைய நபரொருவர் கோடரியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குரிகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் இன்று (14.05.2023) காலை இடம்பெற்றுள்ளது.
முதுன்கொட - குரிகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் துசித குமார என்ற 32 வயதுடைய நபரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
வெட்டி படுகொலை
கைவிடப்பட்ட வீடு ஒன்றில் தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த போதே குறித்த நபர் இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவர் கைது
சம்பவத்தில் உயிரிழந்த நபர் அப்பகுதியில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பான விசாரணைக்காக அப்பகுதியைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது,
மேலும் இச் சம்பவம் தொடர்பான குரிகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
