யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி கோடி ரூபாய் மோசடி: சந்தேகநபர் கைது
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி செய்த நபர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் குற்ற விசாரணை பிரிவு மேற்கொண்ட தேடுதலில் பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யபட்டவர் சுன்னாகம் உட்பட யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் போலி விசாக்களை பயன்படுத்தி பத்துக்கு மேற்பட்டவர்களை ஏமாற்றியதுடன் ஒரு கோடிக்கு மேல் பணம் பெற்று தலைமறைவாக இருந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
