கின்னஸ் சாதனை படைத்த உலகின் நீளமான ஓவியம்
சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை வரைந்து பெண் ஓவியர் உலக சாதனை படைத்துள்ளார்.
சீனாவை சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர், உலக சாதனை வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர், உலகின் ஏழு அதிசயங்களில் முதன்மையானதாகக் காணப்படுகின்றது.
சீனாவின் மலைகளுக்கு இடையே நீண்டதாக கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவர் அந்நியப் படையெடுப்பை சீனாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற பாதுகாப்பு நோக்கத்திற்காக கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.
கட்டுமானப் பணிகள்
இதற்கான கட்டுமானப் பணிகள் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் நீளம் தற்போது 21, 190 கிலோ மீற்றர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், குறித்த ஓவியத்திற்கான கருப்பொருளாக காலப்போக்கிற்கு ஏற்ப தொடர்ச்சியாக நாகரிகம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதாகும்.
இந்நிலையில், குவோ ஃபெங் சீனப் பெருஞ்சுவரின் மேல் 60 நாட்களுக்கு மேலாக அமர்ந்து தனது கலைப்படைப்பை 1014 மீற்றர் நீளமுள்ள கேன்வாஸில் வரைந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |