பிரித்தானியாவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்படவுள்ள முக்கிய புள்ளி
இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதனை திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச்சென்றிருந்தார்.
இந்நிலையில்,அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளதையடுத்து அவரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை இங்கிலாந்து அரசு கைது செய்திருந்ததுடன், மேலும் அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பில் இங்கிலாந்து அரசும் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.இதற்கிடையே விஜய் மல்லையா, தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன்,மேலும் இங்கிலாந்தில் புகலிடம் கோரி விஜய் மல்லையா விண்ணப்பம் செய்துள்ளதால் பின்னர் நாடு கடத்துவது குறித்து உறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் இங்கிலாந்திடம் இருந்து சாதகமான பதில் வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷன்வர்தன் ஷ்ரிங்கபா அறிவித்துள்ளார்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
