மாத இறுதிக்குள் புதிய அமைச்சரவை
அமைச்சரவை மாற்றங்கள் மற்றும் ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிப்பது என்பவற்றை ஜனவரி மாத இறுதிக்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தககவல்கள் தெரிவிக்கின்றன.
12 புதிய அமைச்சர்கள்
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அடிப்படை இணக்கப்பாட்டுடன் இந்த அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அமைச்சரவை மாற்றத்தின் போது 12 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
பொதுஜன பெரமுன பரிந்துரைத்துள்ள அந்த கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளன.
இவர்களை தவிர வஜிர அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அமைச்சு பதவிகளை வழங்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.
விளையாட்டு, பெருந்தெருக்கள், போக்குவரத்து, வனஜீவராசிகள், சுகாதாரம், துறைமுகங்கள், கைத்தொழில்,மின்சக்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சுக்களில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக பேசப்படுகிறது.
ஆறு புதிய ஆளுநர்கள்
அதேவேளை ஆறு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த சிலர் மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவை ஆகிய மாகாணங்களின் ஆளுநர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வடமேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
