மட்டகளப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பிரதேசத்தில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் மகிழடித்தீவு பிரதேச காளிகோவில் ஆலமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சடலம் இன்று (25) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகிழடித்தீவு பாடசாலை வீதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குமாரசாமி திலகேஸ்வரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம்
குறித்த நபர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று (24) இரவு வீட்டின் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த போது அங்கிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த நபரின் மனைவியார் இன்று அதிகாலை ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்ல எழுந்து கணவரை தேடிய போது அவரை வீட்டில் காணவில்லை. அவர் அருகில் சென்றிருக்கலாம் என நினைத்து அவர் வேலைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவர் காலை 8.30 மணியளவில் அந்த பகுதியிலுள்ள காளிகோவில் மூலஸ்தானப்பகுதியிலுள்ள ஆலமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அங்கிருந்த சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கமைய சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மின்சாரம் தாக்கி சிறுவன் மரணம் |





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
