வெவ்வேறு இடங்களில் இருந்து இரு சடலங்கள் மீட்பு
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை தெற்குப்
பகுதியில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய
நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் வசித்து வந்த 64 வயதான 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெலம்பொட பிரதேசம்
வெலம்பொட - பரண பட்டிய பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவமானது இன்று(25) நடைபெற்றுள்ளது. 68 வயதுடைய வயோதிபப் பெண்னே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார் எனவும், அவரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் இந்த கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வெலம்பொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.