காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் பலி
மட்டக்களப்பு - கிரான், பொண்டுகள் சேனை வீதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(19.08.2024) இடம்பெற்றுள்ளது.
கிரான், புலிப்பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த தம்பிபிள்ளை அம்பிகைராசா எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்றுப் பரிசோதனை
குறித்த நபர், புலிபாய்ந்தகல் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து பூலாக்காடு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு திங்கள் கிழமை (19) அதிகாலை துவிச்சக்கர வண்டிலில் சென்ற வேளையில் மரத்தின் மறைவில் நின்ற காட்டு யானை தாக்கியதில் அந்த இடத்திலேயே உயிர் இழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோரளைப்பற்று தெற்கு, கிரான் பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி சென்று சடலத்தை பார்வையிட்டதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்திசாலைக்கு சடலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்றைய தினம்(20) உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam