பாதியிலேயே வெளியேறிய ஷுப்மன் கில்.. வைத்தியசாலையில் அனுமதி
இந்திய அணித் தலைவர் ஷுப்மன் கில், கழுத்து பிடிப்பு (Neck Spasm) காரணமாக பாதியிலேயே ஆட்டத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளாக நேற்று (15) இடம்பெற்றது.
இதன்போதே அவர் பாதியில் வெளியேறிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர் கண்காணிப்பு
சௌரவ் ஹார்மர் வீசிய பந்தில் பவுண்டரி அடித்த பிறகு, சுப்மன் கில்லுக்கு திடீரென கழுத்து வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், பரிசோதனைக்காக இரவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
ஷுப்மன் கில்-க்கு கழுத்து பிடிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தங்களது மருத்துவக் குழுவால் அவர் கண்காணிக்கப்படுகிறார் எனவும் அவர் போட்டியில் கலந்துகொள்வது அவரது முன்னேற்றத்தைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |