வெளியான பரீட்சை முடிவுகள் : அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள் விபரம்
2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை முடிவுகளின்படி, 176,527 மாணவர்கள், அதாவது 62.64வீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர் என பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பரீட்சை முடிவுகள் நேற்று இரவு(31) வெளியிடப்பட்டதாகத் பரீட்சை ஆணையர் நாயகம் இன்று அதிகார பூர்வமாக அறிவித்தார்.
மாணவர்களின் பரீட்சை முடிவுகள் நிறுத்தி வைப்பு
இதற்கிடையில், 111 மாணவர்களின் பரீட்சை முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பரீட்சையில் பங்கேற்ற 30,000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளதாகத் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பாடங்களிலும் 'ஏ' தேர்ச்சி பெற்ற பாடசாலை பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 7,477 ஆகும், இது 3.38% ஆகும். மேலும் 823 தனிப் பரீட்சாத்திகளும் அனைத்துப் பாடங்களிலும் 'ஏ' தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடப்பிரிவு வாரியான பல்கலைக்கழக சேர்க்கை விகிதங்கள்
உயிரியல் - பாடசாலை பரீட்சாத்தி 59.56% - தனியார் 58.43%
இயற்பியல் - 63.96% - தனியார் 61.59%
வணிகவியல் - 72.02% - தனியார் 66.29%
கலை - 67.57% - தனியார் 63.57%
பொறியியல் தொழில்நுட்பம் - 64.85% - தனியார் 62.65%
உயிர்முறைமைகள் தொழில்நுட்பம் - 71.76%
இதர பாடங்கள் - 55.39%
மாகாணரீதியான பல்கலைக்கழக சேர்க்கை சதவீதம்:
மேற்கு - 69.42%
வடமேற்கு - 68.48%
வடக்கு - 66.91%
கிழக்கு - 66.32%
தெற்கு - 65.69%
சப்ரகமுவ - 64.97%
ஊவா - 63.53%
மத்திய - 63.04%
வட மத்திய - 60.91%
முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள்
இதற்கிடையில், கலைப் பிரிவில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை 32.03 சதவீதம் குறைந்துள்ளதாகத் பரீட்சைகள் ஆணையர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு உயிரியல் பிரிவில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்கள் விபரம்.
உயிரியல் பிரிவு முதலாம் இடம் - திலான் சஞ்சனா (றோயல் கல்லூரி, கொழும்பு)
இரண்டாம் இடம் - கிரிஷான் சசிந்து நாம்தாரா (தக்ஷிலா மத்திய கல்லூரி, ஹொரணை)
மூன்றாம் இடம் - தர்ஷனா கோணேஷ் (ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, திருகோணமலை)
இயற்பியல் பிரிவு தேவேந்திரன் திருக்குமரன் (கிளிநொச்சி மகா வித்தியாலயம்)
தருஷ கிம்ஹான் கம்லத் (மலியதேவ வித்தியாலயம், குருநாகல்)
வினுர பிரசாத் டி மெல் (ஸ்ரீ சுமங்கலா ஆண்கள் கல்லூரி, பாணந்துறை)
வணிகப் பிரிவு சுபைதீன் மொஹமட் பர்தான் (காத்தான்குடி மத்திய கல்லூரி)
சேனாதி திஹஸ்ன சுமணசேகர (மியூசியஸ் கல்லூரி, கொழும்பு)
திலீப சந்தரேஸ் கருணாரத்ன - (பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா)
கலைப் பிரிவு அச்சிந்த மிஹிரங்க ரத்நாயக்க (வயம்ப றோயல் கல்லூரி, குருநாகல்)
அலியா ஷீனா (தேவி பாலிகா கல்லூரி, கொழும்பு)
மெதுசாரி தினேதியா ரணதுங்க (மியூசியஸ் கல்லூரி, கொழும்பு)
பொறியியல் தொழில்நுட்பப் பிரிவு ஹெஷான் அனுஜய வணிகசூரிய (பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா)
சிதிஜ துலான் பண்டார (விஜயபா தேசிய பாடசாலை, மஹவ)
ரிவின் வின்சர (C.W.W. கன்னங்கர மகா வித்தியாலயம், மத்துகம)
உயிரியல் அமைப்புகள் தொழில்நுட்பப் பிரிவு இஷானி மனோதா (பண்டாரநாயக்க மத்திய கல்லூரி, வெயங்கொட, கம்பஹா)
விஹங்க இமாஷா கந்தேராச்சி (ரத்னாவலி பெண்கள் கல்லூரி, கம்பஹா)
ஜயத்மா அமந்தி விஜேசிங்க (இப்பாகமுவ மத்திய கல்லூரி)