இலங்கையின் முப்படைகளில் இருந்து வெளியேறிய பெருந்தொகையிலானோர்
2021ஆம் ஆண்டு முதல் இலங்கையின் முப்படைகளில் இருந்து சுமார் 30,000 பேர் வெளியேறியுள்ளதாக பொது நிதிக்கான நாடாளுமன்றக்குழு தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் 16.5 பில்லியன் ரூபாய்க்கான செலவுத்திட்ட மதிப்பீட்டை குறித்த குழு நேற்று (08.12.2023) பரிசீலித்தபோதே இந்த விடயம் வெளியாகியுள்ளது.
தற்போதைய நிதியொதுக்கீடு
இந்நிலையில், குறித்த நிதியொதுக்கத்தின் மூலம் படைகளுக்கு உணவு விநியோகம் செய்பவர்களுக்கு நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை மேற்கொள்ளமுடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற பாதுகாப்புப் படை அதிகாரிகள், பாதுகாப்புப்
படையைச் சேர்ந்த ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 3400 கிலோ கலோரிகளைக்
கொடுக்கக்கூடிய உணவு தேவை என்று தெரிவித்தனர்.
எனினும் தற்போதைய நிதியொதுக்கீட்டின் ஊடாக இதனை மேற்கொள்ளமுடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
என்னை விமர்சிக்கும் முட்டாள்களுக்கு பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சபையில் சாணக்கியன் பதிலடி(Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |