இலங்கையில் வியப்பை ஏற்படுத்திய பூனை - பொலிஸ் அதிகாரி நெகிழ்ச்சி
குருணாகல், ரிதிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வளர்க்கப்பட்ட பூனை 72 கிலோமீட்டர் தூரத்தை கடந்து பாதுகாப்பாக மீண்டும் வீட்டுக்கு வந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டரை வயதான டுட்டு எனும் பூனை, ரிதிகம பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான ஹேமந்த சுபசிங்க என்பவரின் செல்லப் பிராணியாகும்.
குறித்த அதிகாரி அங்கு பணியில் இருந்த போது, அதிகார வீட்டு வளாகத்தில் சுற்றித் திரிந்திருந்த இந்த பூனைக்கு டுட்டு எனப் பெயரிட்டுப் பராமரித்துள்ளார்.
செல்லப்பிராணி
ரிதிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உத்தியோகபூர்வ இல்லத்தில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட இரண்டரை வயது பூனை மாவனெல்ல ஹெம்மாத்தகம பகுதிக்கு அழைத்து சென்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 6ஆம் திகதி டுட்டு எனும் பூனை திடீரென காணாமல் போனது. 22 நாட்கள் கழித்து, எந்தவித ஆபத்தும் இன்றி டுட்டு ரிதிகம பொலிஸ் நிலைய வீடு வரை தனியாக திரும்பியது.
ஹெம்மாத்தகமவிலிருந்து மாவனெல்லா, ரம்புக்கன மற்றும் மாவதகம உள்ளிட்ட நகரங்களை கடந்து வந்துள்ள டுட்டுவின் பயணம், சுமார் 72 கிலோமீட்டர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி நெகிழ்ச்சி
“பழைய இல்லம் மற்றும் சுற்றுவட்டாரத்தை நினைவில் வைத்திருந்த, டுட்டு அந்த பயணத்தை செய்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாக பொலிஸ் அதிகாரி ஹேமந்த சுபசிங்க தெரிவித்துளளார்.
உணவின்றி பசியுடன் பயணித்ததால், அது மிகவும் மெலிவடைந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி கவலை வெளியிட்டுள்ளார்.





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
