யாழில் கூரிய ஆயுதங்களுடன் வாள்வெட்டுக்கும்பல் கைது
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக்கும்பல் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (15.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக இன்று (15) அதிகாலை 2 மணியளவில் முச்சக்கர வண்டியில் பயணித்த 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
அத்துடன் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டிக்குள் இருந்து வாள், இரும்பு கம்பி மற்றும் இரும்பு குழாய் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது யாழ்ப்பாணம் மத்யூஸ் வீதியை சேர்ந்த 25 வயதான முச்சக்கர வண்டி சாரதி, கொக்குவிலை சேர்ந்த 25 வயதான இளைஞன், யாழ்ப்பாண நகரத்தை சேர்ந்த 20 வயதான இளைஞன், குருநகரை சேர்ந்த 26 வயதான இளைஞன், வண்ணார்பண்ணையை சேர்ந்த 19 வயதான இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam