பிரதமர் மோடியின் பேரணிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி
கோவையில் இடம்பெறவுள்ள பிரதமர் மோடியின் பேரணிக்கு சென்னை மேல் நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது.
குறித்த பேரணியானது எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக மோடியின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ், பொலிஸாரின் வாதத்தை ஏற்காத நிலையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி வழங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
வாக்கு சேகரிப்பு
பிரதமர் மோடி இன்று(15) கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். மீண்டும் எதிர்வரும் 18ஆம் திகதி தமிழகம் வரும் அவர் அன்று கோவை கவுண்டம்பாளையத்தில் தொடங்கி மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரம் வழியாக தலைமை அஞ்சல் நிலைய சந்திப்பு வரை திறந்த சிற்றூந்தில் நின்றவாறு பேரணி செல்ல திட்டமிடப்பட்டது.
இதன்படி மொத்தம் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு, சிற்றூந்தில் நின்றவாறு பொதுமக்களிடம் பிரதமர் மோடியால் வாக்கு சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் பாதுகாப்பு காரணம் கருதி கோவை பொலிஸார் இன்று அனுமதி மறுத்த நிலையில், சென்னை மேல் நீதிமன்றம் மோடியின் பேரணிக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று கோவையின் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |