பெண்ணை வாளால் தாக்கிய நபர் ஆயுதங்களுடன் கைது
குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கியுடன் ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் மாலபே, தலஹேன பகுதியில் ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
நவம்பர் 14ஆம் திகதியன்று பொரளை பகுதியில் ஒரு பெண்ணை வாளால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றத்தின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு
T56 ரக துப்பாக்கி, வெடிமருந்துகள், 10 தோட்டாக்கள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டு ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. ஹோமாகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam