கனடாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்கள்: சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்
கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் மனநிலை குறித்து விரிவான மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென அந்நாட்டின் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேகநபர் ஃபேப்ரியோ டி சொய்சா தற்போது ஒட்டாவாவின் கார்லேட்டன் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர் தனது பெயரையும்,பிறந்த திகதியையும் மெல்லிய குரலில் கூறியுள்ள நிலையில், அதிகாரிகள் அதை தெளிவாகவும் சத்தமாகவும் சொல்லும்படி கூறியுள்ளனர்.
நீதிமன்ற விசாரணையின் போது, படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் உள்ள பிழைகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், குற்றச்சாட்டில் மாற்றமில்லை என கனேடிய ஊடகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுகள்
மேலும் வழக்கின் சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுகள் நேற்று நீதிமன்றத்தில் மீண்டும் வாசிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
மேலும், நீதிமன்ற விசாரணையில் பதில் அளிப்பதற்காக சந்தேகநபர் ஆங்கில மொழியை தெரிவுசெய்துள்ளதுடன் அடுத்த விசாரணையை எதிர்வரும் 28ஆம் திகதி நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரான ஃபேப்ரியோ டி சொய்சா மீது 06 கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி எவன் லைட்டில் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரின் மனநிலை
ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் டெபேன் கில்பர்ட், "இந்த குற்றவியல் வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு, சந்தேக நபரின் மனநிலை குறித்து குறிப்பிடத்தக்க மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு, அத்தகைய செயலைச் செய்வது அவசியம். இதன் முழுமையான உண்மைகள் வெளிவர இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை, இந்த தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தனுஷ்க விக்கிரமசிங்க இன்று (15) வைத்தியசாலையில் இருந்து வெளியேற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
