தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமது வாழ்வாதாரத்தை எப்படி கொண்டு செல்வதென்ற திண்டாட்டத்தில் நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அதையும் தாண்டி, பலர் இலங்கையில் இருந்து வெளியேறிச் சென்று விடலாம் என்ற நோக்கில் வெளிநாட்டுக்கு படையெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்லும் நிலை அதிகரித்துள்ளது.
தொழில் நிமித்தம், சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், குடும்ப சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு, வெளிநாட்டுக்கு சென்று தொழில் புரிய எண்ணுபவர்களுக்கு மொழிப்பிரச்சினை என்ற ஒன்று ஏற்படலாம்.
அந்தவகையில், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தற்போது கொரிய மொழியை பயில்வதற்கான சிறப்பு கற்கைநெறிக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இக்குறுகிய கால கற்கைநெறி படிப்படியான முறையில் மொழியைக் கற்க வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆறு மாத காலப் பகுதியில் ஆங்கில மொழி மூலம் இதற்கான கற்கைகள் நடத்தப்படும்.
விண்ணப்பிக்க இங்கே அழுத்தவும்.. மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.. இணையத்தளம் - www.ou.ac.lk
விண்ணப்ப முடிவு திகதி - 2022 - 03 - 25 |
மற்றும் பல தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே அழுத்துங்கள்
தொடர்புடைய செய்திகள்..
இலங்கையை அச்சுறுத்தும் பொருளாதார நெருக்கடி! வேலை இல்லாமல் திண்டாடுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்
சீன மொழி தெரியாத இலங்கையர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்