சீன மொழி தெரியாத இலங்கையர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமது வாழ்வாதாரத்தை எப்படி கொண்டு செல்வதென்ற திண்டாட்டத்தில் நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அதையும் தாண்டி, பலர் இலங்கையில் இருந்து வெளியேறிச் சென்று விடலாம் என்ற நோக்கில் வெளிநாட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்லும் நிலை அதிகரித்துள்ளது.
தொழில் நிமித்தம், சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், குடும்ப சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு, வெளிநாட்டுக்கு சென்று தொழில் புரிய எண்ணுபவர்களுக்கு மொழிப்பிரச்சினை என்ற ஒன்று ஏற்படலாம்.
அந்தவகையில், ஜப்பானிய மொழி மற்றும் சீன மொழியினை இலவசமாக கற்கும் ஒரு வாய்ப்பு இலங்கையர்களுக்கு வழங்கப்படுகின்றது.
25 வாரங்களுக்கு உட்பட்ட இந்த சான்றிதழ் கற்கைநெறி முற்றிலும் இலவசமானது, அத்துடன் அவரவர் இருக்கும் பிர தேசத்திலேயே கல்வி கற்கும் வாய்ப்பும் வழங்கப்படுகின்றது.
18 தொடக்கம் 35 வயதுக்கு இடைப்பட்ட அனைவரும் இந்த சான்றிதழ் கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்.. Online Application – Chinese Language Online Application – Japanese Language மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.. விண்ணப்ப முடிவு திகதி - 2022.04.05 |
(மேலும் பல விபரங்களை அறிந்து கொள்ள இந்த இணைப்பை அழுத்தவும்)