புத்தளத்தில் பிடிக்கப்பட்ட இராட்சத முதலை
புத்தளத்தில் நபரொருவரின் வீட்டு தோட்டத்திற்குள் உட்புகுந்த இராட்சத முதலையொன்று பிடிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் - வண்ணாத்திவில்லு சமகிபுர பகுதியில் அமைந்துள்ள நபரொருவரின் வீட்டு தோட்டத்தினுள் இன்று (16.05.2024) அதிகாலை இராட்சத முதலையொன்று உற்புகுந்துள்ளது.
இதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
பிடிக்கப்பட்ட முதலை
இதையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த வனஜீவரசிகள் திணைக்கள அதிகாரிகள் கடும் பிரயத்தணத்திற்கு மத்தியில் முதலையைப் பிடித்துள்ளனர்.
பின்னர் பிடிக்கப்பட்ட முதலையை கல்வில சூழலியல் பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விடுவித்துள்ளனர்.
இதன்போது, பிடிக்கப்பட்ட முதலையானது சுமார் 7 அடி நீளமுடையது எனவும் சுமார் 100 கிலோ கிராம் எடைக் கொண்டு காணப்படுவதாகவும் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |